அன்புடையீர்,
அன்பு வணக்கம்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
இந்தாண்டு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியானதாக, அமைதி நிறைந்ததாக, உள்ளம் உவகை கொள்வதாக அமைய எனது உள்ளம் கனிந்த வாழ்த்துகள்.
இயற்கையோடு இயைந்த வாழ்வை வாழ்வது நமக்கெல்லாம் ஒரு விருப்பமான விடயமாக இருந்து கொண்டே இருக்கும் இந்த தருணத்தில் அந்த விருப்பத்தை நடைமுறை சாத்தியமாக்க உங்களால் ஆன முயற்சியை இன்றிலிருந்து துவங்க என் வாழ்த்துகள். இது குறித்து உங்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப் பட்டால் என்னைத் தொடர்பு கொள்ளவும்.
நாம் அனைவரும் இருந்து நமக்கு மட்டுமின்றி நமது வருங்கால சந்ததிக்கும் மற்ற அனைத்து உயிர்களுக்கும் ஏற்ற இடமாக இப்புவியை மாற்றிட இயலும். அதற்கான முயற்சியை தொடர்ந்து முன்னெடுப்போம்.
புத்தம் புது வாழ்த்து!
காலத்தின் இரகசியம் அறிந்தோர்
காலத்தினை வென்று வாழ்கின்றனர்!!
காலத்தின் இரகசியம் அறிய அவா
காலத்தே உங்களுக்கும் பிறக்கிறதோ?!
காலத்தில் நீங்கள் செய்யும் செயல்களை கவனிக்க
காலத்தின் இரகசியம் தானே விளங்கும்!
பிறப்பு எப்போதும் புதிதென்பதறிந்து
உள்ளமெல்லாம் புத்துயிர் பெறுகிறது!
புத்தாண்டு என்ற சொல் கேட்டதும்
செல்கள் எல்லாம் புத்துயிர் பெறுகிறது!
வாழ்த்துகள் என்ற வார்த்தை கேட்டதும்
மனம் மலர்ந்து புத்துயிர் பெறுகிறது!
பிறக்கும் ஒவ்வொரு புது நொடியிலும்
புத்தம் புது செயல்கள் செய்து
நீங்களும் உங்கள் குடும்பத்தாரும்
நம் மக்களும் சிறப்புற வாழ்ந்திட
இயற்கையின் ஆசியை
வாழ்த்துச் செய்தியாக பகிர்ந்து
மகிழும்…
உங்கள்
ரா. மகேந்திரன் (எ) கருவெளி ராச. மகேந்திரன்
2024 ஆண்டு திட்டமிடலுக்கான நாட்காட்டியுடன் கூடிய திட்டமிடலுக்கான கையேட்டை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்
Kommentare